ரஷ்யாவிமானத் தளம் வெடித்து எரியும் காட்சிகள் ஒரே இரவில் வெடித்து சிதறிய விமானத் தளம்
06 Jun,2025
இன்று வெள்ளி(06) அதிகாலை, விமானத் தளம் வெடித்து எரியும் காட்சிகள் Engels airfield in the Saratov region உள்ள என்ற விமான தளத்தை உக்ரைன் ட்ரோன்கள் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் விநோதமான நிகழ்வு என்ன என்றால், இந்த தளத்தில் தான் அதி கூடிய வான் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது.
இந்த வான் எதிர்ப்பு கட்டமைப்பு எதுவுமே செயல்படவில்லை. உக்ரைன் அனுப்பிய அனைத்து ட்ரோன்களும் சரமாரியாக விழுந்து, பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை ரஷ்யாவே தற்போது உறுதிசெய்துள்ளது. விமானத் தளம் வெடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
உக்ரைன் எல்லையில் இருந்து 500KM தொலைவில் ரஷ்யாவுக்கு உள்ளே அமைந்திருக்கும் இந்த விமானத் தளத்தில் இருந்து தான், உக்ரைன் மீது பல தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வந்தது. ஆனால் உக்ரைனில் இருந்து 500KM பறந்து சென்ற ட்ரோன்களை எப்படி ரஷ்ய ராடர் தவறவிட்டது ? என்பது தெரியவில்லை. அது போக , சிலவேளை இந்த ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு உள்ளே இருந்து தான் ஏவப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது ஆப்பரேஷன் ஸ்பைடர் வெப் 2.0 ஆக கூட இருக்கலாம் என்ற கருத்துகள் பரவி வருகிறது. இந்த விமான தளத்தில் எத்தனை விமானங்கள் அழிந்தது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை