உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை, டிரோன் தாக்குதல்
06 Jun,2025
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று கடும் தாக்குதலை நடத்தியது. தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ரஷ்யா நடத்திய இந்த கடும் தாக்குதலில் பல மாகாணங்களில் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சோலோமியான்ஸ்கி மாவட்டத்தில் 16 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் 11வது மாடியில் தாக்குதலினால் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து ராணுவ அதிகாரி கூறுகையில், தாக்குதல் நடத்த வந்த இலக்குகளை வான்பாதுகாப்பு அமைப்புக்கள் தடுத்ததால் அவை தீப்பிடித்தது என்றார். ரஷ்யாவின் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.