காஸாவில் அகதிகள் முகாமாக செயல்படும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு!!
26 May,2025
காஸாவில் அகதிகள் முகாமாக செயல்படும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். அல்-ஜர்ஜாவி பள்ளியை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல் வெளியாகி உள்ளது. 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.