பாலஸ்தீனம்-இஸ்ரேல் போர் நிறுத்தம்.. அமெரிக்க திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல்!
26 May,2025
காசா மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பணயை கைதிகளை விடுவித்தல், 70 நாட்களுக்கு சண்டை நிறுத்தம் ஆகியவை கடைபிடிக்கப்படும்.
அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் போர் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து ஹமாஸ்-இஸ்ரேல் மத்தியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். விட்கோஃப்பின் முன்மொழிவுக்கு தற்போது ஹமாஸ் தரப்பு ஒப்புதல் அளித்திருக்கிறது என ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் போர் முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் காசாவின்
குறிப்பிட்ட பகுதியிலிருந்து இஸ்ரேல் ராணுவ படைகள் பின்வாங்கப்படும். 70 நாட்கள் சண்டை நிறுத்தப்படும். இதற்கு பதிலாக ஹமாஸ் தரப்பில், உயிருடன் உள்ள 10 பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மறுபுறம் பல பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும். என்னதான் ஹமாஸ் இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்தாலும், இஸ்ரேல் தரப்பிலிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை. இதற்கு முன்னரும் கூட இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அது அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இஸ்ரேல் இந்த போர் நிறுத்த ஒப்பந்ததை முறித்துக்கொண்டு மார்ச் மாதம் 18ம் தேதி மீண்டும் காசா மீது தனது தாக்குதலை தொடங்கியது.
இந்த போருக்கான தொடக்கப்புள்ளியாக அக்.7ம் தேதி நடந்த தாக்குதல் சொல்லப்படுகிறது. அதாவது 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதில் 1300 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக இஸ்ரேல் இப்போது வரை போரை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆனால் விஷயம் அறிந்தவர்கள் இந்த போருக்கான தொடக்கம் இது கிடையாது என்று கூறியுள்ளனர். இஸ்ரேல் என்பத இடையில் உருவாக்கப்பட்ட நிலைப்பரப்புதான். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடமிருந்து தப்பிய யூதர்கள் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் குடியேறினர். இந்த குடியேற்றம் போர் முடிவடைந்த பின்னர் அதிகரித்தது. இதுவே யூதர்களுக்கான நிலப்பரப்பாக பின்னர் மாறியது. அது கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து இஸ்ரேல் என்கிற பெயரில் பாலஸ்தீனத்த விழுங்கிக்கொண்டே வந்தது.
இதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் முழு ஆதரவு. இதனால் பாதிக்கப்பட்ட பூர்வீக பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நிலத்திற்காக போராட்டத்தை தொடங்கினர். குரல் எழுப்பியவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டதால், ஆயுதம் ஏந்திய குழுக்களும் உருவாக தொடங்கியது. இதுவே பின்னாட்களில் பாலஸ்தீனத்தில் அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றியது. இப்படித்தான் ஹமாஸ் உருவாகி இயங்கி வருகிறது. ஒருபுறம் அரசியல், மறுபுறம் ஆயுதம் ஏந்திய போராட்டம். ஹமாஸ்-இஸ்ரேல் ராணுவத்தின் மோதலில் ஒரு திருபுமுனைதான் அக்.7ம் தேதி நடந்த சம்பவம். மற்றபடி, இது மட்டுமே போருக்கான முழுமையான காரணம் அல்ல என்று கூறுகின்றனர்.
இப்படி கொடூரத்தை பார்த்ததில்லை!" எது எப்படி இருப்பினும் போர் எதற்கும் தீர்வு கிடையாது. அமைதி மட்டுமே மனித குலத்தை வழிநடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.