ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான்?
10 May,2025
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு, காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி மீண்டும் ட்ரோன் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில் முதன் முதலில் போர் நிறுத்தம் என அறிவித்தது அமெரிக்கா தான் அந்த வகையில் அமெரிக்காவின் பேச்சை பாகிஸ்தான் கேட்கவில்லை என்கின்றனர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள். மேலும் பாகிஸ்தான் ராணுவம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் கடந்த மூன்று தினங்களாக ஜம்மு காஷ்மீர். ராஜஸ்தான். பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ட்ரோனள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பதில் தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கணக்கான பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் இஸ்லாமாபாத், கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்திய ஏவுகணைகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தின. இரு நாடுகள் இடையே அடுத்த கட்டமாக நேருக்கு நேர் மோதல் ஏற்படலாம் என கூறப்பட்ட நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது
முதல் முதலாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருதரப்பு இடையே பேசியதாகவும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கூறினார். சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் துணை பிரதமர் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி போர் ஒப்பந்தம் அமலுக்கு வருவதாகவும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் இந்திய ராணுவ ஜெனரலை தொடர்பு கொண்டு பேசியதாகவும், 5 மணி முதல் போர் ஒப்பந்தம் அமலுக்கு வருவதாக கூறியிருந்தார். அதே நேரத்தில் எந்தவித நிபந்தனைகளுக்கும் இந்தியா கட்டுப்படாது.
பாகிஸ்தான் ஒருவேளை தாக்குதல் நடத்தினால் இந்தியா அதனை போராக கருதும் என வெளியுறவுத்துறை விளக்கம் அளித்து இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த மூன்று மணி நேரத்திலேயே மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறலை தொடங்கி இருக்கிறது ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் குஜராத்தின் சில பகுதிகளில் பாகிஸ்தான் குரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
வான் பாதுகாப்பு அம்சத்தை அப்கிரேட் செய்த இந்திய ராணுவம்" அதே நேரத்தில் உச்சகட்ட கண்காணிப்பில் இருந்த இந்திய ராணுவமும் உடனடியாக அதற்கு பதில் அளித்தது. இந்திய எல்லை நோக்கி வந்த பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. போர் நிறுத்தத்தை மீறி என்ன நடக்கிறது என ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் குஜராத்திலும் ட்ரோன்கள் பறப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சர் பதிவிட்டது பரபரப்பை மேலும் அதிகமாக்கியது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் அத்மீறல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த விஷயத்தில் அமெரிக்காவின் பேச்சை பாகிஸ்தான் கேட்கவில்லை என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சுமார் 8,300 கோடி நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை நிறுத்த இந்தியாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. Y
பாகிஸ்தான் பழைய நிலைக்கு திரும்ப 10 வருடங்கள் ஆகுமாம்" மேலும் பாகிஸ்தானால் உலக அரங்கில் டொனால்ட் ட்ரம்புக்கும் தலை குனிவு ஏற்பட்டிருக்கிறது. காரணம் முதன் முதலில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக கூறியது டொனால்ட் டிரம்ப் தான். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் துணை பிரதமர் டொனால்ட் ட்ரம்பை வெகுவாக புகழ்ந்து இருந்தனர். இந்த நிலையில் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி இருப்பது இரு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.
ஒன்று பாகிஸ்தானுக்கு பல்வேறு வகைகளில் உதவிய அமெரிக்காவில் பேச்சை பாகிஸ்தான் கேட்கவில்லையா என்ற முதல் கேள்வியோடு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியாவின் ராணுவ அதிகாரிகளும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் உறுதி செய்தது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் பிரதமர் துணை பிரதமர் மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக கூறினர். ஆனால் பாகிஸ்தானின் ராணுவத்தின் தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பாகிஸ்தான் அரசின் பேச்சை இராணுவம் கேட்கவில்லை என்பதை இந்த சம்பவம் அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது