காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு!
24 Apr,2025
காசாவில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய வான் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவின் ராபா பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட இத் தாக்குதலில் அங்குள்ள இஸ்லாமிய பாடசாலை உட்பட அப்பகுதியிலுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த கோர தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர் எனவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் இக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகளும் கண்டம் வெளியிட்டுள்ளன.
காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் காசா மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுத குழுவினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் இராணுவம் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
2 ஆண்டுகளாக நீடித்து வரும் இப் போரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது