காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 23 பேர் பலி
23 Apr,2025
காசா – இஸ்ரேல் இடையே 15 மாதங்களாக நீடித்து வந்த போர் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் எடுத்த முயற்சியின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு காசாவில் அகதிகள் தங்கி உள்ள பள்ளிகள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் பள்ளி கட்டிடம், குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 23 பேர் கொல்லப்பட்டனர்.