அமெரிக்காவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
14 Apr,2025
அமெரிக்காவின் இன்று மதியம் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் டியாகோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ரிக்டர் அளவில் 5.2 என இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் பகுதியான ஜூலியன் எனும் பகுதி நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது என்று ஆய்வளர்கள் கூறுகின்றனர்.
இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறதா? என்பது பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் 5.1 என்கிற ரிகடர் அளவிலான நிலநடுக்கம் சாதாரணமானதாக சொல்லப்பட்டாலும் எதிர்பாரத நேரத்தில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடியவை என்றும் கூறப்படுகிறது. Powered By பழைய கட்டிடங்கள், தரமற்ற முறையில் உள்ள கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படலாம். மக்கள் தொகை நெருக்கம் குறைவாக உள்ள பகுதியில் இந்த நிலநடுக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் கலிஃபோர்னியா மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.