நியூயார்க்கில் வயலில் விமானம் விழுந்து விபத்து: 6 பேர் பலி?
14 Apr,2025
நியூயார்க்கில் விமானம் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 6 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மிட்சுபிஷி எம்யு-2பி என்ற விமானம் கடந்த சனிக்கிழமை 6 பேருடன் ஹட்சனனுக்கு அருகில் உள்ள கொலம்பியா கவுண்டி விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது.
நியூயார்க்கின் மேற்கு பகுதியில் மிட்சுபிஷி எம்யு-2பி பறந்து கொண்டிருந்தபோது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர் தடைப்பட்டது. இந்த விமானம் கோபகே அருகே 48 கிமீ தொலைவில் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளான பகுதி சேறு நிறைந்த வயல் என்பதால் மீட்பு குழுவினர் அந்த இடத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.