அமெரிக்காவின்கனமழைக்கு 18 பேர் உயிரிழப்பு.. புயல் எச்சரிக்கை அறிவிப்பு!
07 Apr,2025
அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து ஓஹியோ வரை பல்வேறு மாகாணங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக, கென்டகி, டென்னசி, அலபாமா ஆகிய மாகாணங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து ஓஹியோ வரை பல்வேறு மாகாணங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக, கென்டகி, டென்னசி, அலபாமா ஆகிய மாகாணங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதே போன்று, ஆர்கன்சஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பிரதான சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அமெரிக்காவில் வெள்ளப் பாதிப்பில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அலபாமா, ஜார்ஜியா, பிளோரிடா ஆகிய மாகாணங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.