அமெரிக்கா முன்வைத்துள்ள அணுசக்தி உடன்படிக்கையை ஈரான் ஏற்காவிட்டால் குண்டுவீச்சு
31 Mar,2025
-
அமெரிக்கா முன்வைத்துள்ள அணுசக்தி உடன்படிக்கையை ஈரான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா குண்டுவீசலாம் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானிற்கு எதிராக அமெரிக்கா வரிகளை விதிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்பிசி நியுசிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் அணுசக்தி திட்டம் தொடர்பான அமெரிக்காவின் உடன்படிக்கையை ஈரான் ஏற்றுக்கொள்வதற்கு சில வார அவகாசத்தை வழங்குவேன் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதைஅடிப்படையாக வைத்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.