டோங்கா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை
31 Mar,2025
பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகள் பிளந்துள்ளன. தற்போது வரை 1,600க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அதேபோல் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அங்கு பலி குறைவாக உள்ளது.
மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் என்பது தாய்லாந்து, வங்கதேசம், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. மியான்மரில் இன்று 3 வது நாளாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த நிலநடுக்கங்கள் என்பது சக்தி குறைந்து இருந்ததால் மேற்கொண்டு பெரிய சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மியான்மரில் சிக்கிய பலரும் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது. இந்த சோகத்துக்கு நடுவே தான் இன்று டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பது
ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் என்பது ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த டோங்கா தீவு என்பது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் பாலினேசியன் என்ற ராஜ்யத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த டோங்கா தீவு என்பது ஆஸ்திரேலியாவி்ன கிழக்கு கடற்கைரயில் சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த டோங்கா தீவு என்பது மொத்தம் 170 தீவுகளை உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு மொத்தம் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்
l