உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் குழந்தை உட்பட 7 பேர் பலி
24 Mar,2025
உக்ரைனில் ரஷ்யா நேற்று முன்தினம் இரவு நடத்திய டிரோன் தாக்குதலில் 5 வயது குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.உக்ரைன் மீது ரஷ்யா 147 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 97 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் 25 டிரோன்கள் இலக்கு தவறி விழுந்தன. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், சுமி, செர்னிஹிவ், ஒடேசா, டொனெட்ஸ்க் பிராந்தியங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன என்று உக்ரைன் விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் இன்று நடைபெற உள்ள நிலையில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காக உக்ரைன் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பார்கள் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.