அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில் தீ - 12 பேர்
15 Mar,2025
அமெரிக்காவின் டென்வர் விமானநிலையத்தில் தரையிறங்கியவேளை அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் திடீரென தீ பரவியதை தொடர்ந்து 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டென்வர் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை திடீரென தீ மூண்டது அனைவரும் ஸ்லைட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் சிறிய காயங்களுடன் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளனர்.
கொலராடோ ஸ்பிரிங்ஸ் விமானநிலையத்திலிருந்து டலஸ் போர்ட் வேர்த்திற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் இயந்திரத்தில் அதிர்வுகள் காணப்படுவதாக பணியாளர்கள் தெரிவித்ததை தொடர்ந்து விமானம் டென்வர் விமானநிலையத்திற்கு பயணத்தை மாற்றியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானம் ஓடுபாதையில் இறங்கி பயணித்துக்கொண்டிருந்தவேளை தீடிரென தீபரவல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பயணிகள் ஸ்லைட்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
172 பயணிகளும் ஆறு பணியாளர்களும் முனையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.