கனடா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் காயம்
09 Mar,2025
கனடாவில் கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் காயமடைந்தனர். கனடாவின் டொரண்டோவில் உள்ள ஸ்கார்பரோவில் உள்ள கேளிக்கை விடுதியில் வழக்கம்போல் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அப்போது கருப்பு நிற உடை அணிந்த 3 பேர் கும்பல் உள்ளே நுழைந்துள்ளது. எந்த முன் எச்சரிக்கையும் விடுக்காமல் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் காயமடைந்த 12 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தப்பி சென்ற குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். எதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்ற காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.