நான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாசின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்கமுடியாது- சமூக ஊடக பதிவில் டிரம்ப் மிரட்டல்
                  
                     06 Mar,2025
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் நான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாஸ் அமைப்பின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
	 
	இஸ்ரேல் தனது வேலையை முடிப்பதற்காக நான் தேவைiயான அனைத்தையும் அனுப்புகின்றேன் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நான் சொல்வதை செய்யாவிட்டால் ஹமாசின் ஒரு உறுப்பினர் கூட பாதுகாப்பாகயிருக்கமுடியாது என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
	 
	பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் நரகத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்யுங்கள், நீங்கள் கொலை செய்தவர்களின் உடல்களை திருப்பிதாருங்கள் இல்லாவிட்டால் உங்கள் கதை முடிவிற்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
	 
	.காசா பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி காசா மக்களே உங்களிற்கு மிகவும் அழகான எதிர்காலம் காத்திருக்கின்றது, பணயக்கைதிகளை வைத்திருந்தால் நீங்கள் மரணிக்கவேண்டிய நிலையேற்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.