சூடானில் ராணுவ விமானம் விபத்து 46 பேர் பலி
27 Feb,2025
சூடானில் வாடி சயீத்னா விமான தளத்தில் இருந்து ராணுவ விமானம் அன்டோனோவ் புறப்பட்டுச்சென்றது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதியில் வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை. எனினும் சுமார் 46பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஓம்டுர்மானில் உள்ள நவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.