வங்கதேசத்தில் வன்முறையால் உயிரிழந்தவர்களி எண்ணிக்கை 1,400-ஐ தாண்டும்: ஐ.நா. மனித உரிமை
13 Feb,2025
கடந்த ஆண்டு கோடைகாலத்தில் வங்கதேசத்தில் மூன்று வாரங்கள் நடைபெற்ற மாணவர்கள் போராட்டங்களை ஒடுக்கியதில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சேவைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குச் சமமான உரிமை மீறல்களில் வங்கதேச அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டிய தேவையுள்ளது.
பல்வேறு நம்பகமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி, எழுச்சியின் மத்தியில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற முன்னால் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரையிலான போராட்டங்களில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர், மேலும் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் வங்கதேச பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் போராட்டங்களை அடக்குவதற்கான ஒரு வழியாக, “சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், விரிவான தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள் மற்றும் சித்திரவதைகள்” அரசியல் தலைமை மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவு மற்றும் ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்டதற்கான அறிகுறிகளை ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் மேற்கோள் காட்டினார்.