சிரியாவில் காரில் குண்டு வெடிப்பில் 19 பேர் பலி
04 Feb,2025
வடக்கு சிரியா நகரத்தின் புறநகர்ப் பகுதியில் காரில் குண்டு வெடித்ததில் 19 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். வடக்கு சிரியாவின் மன்பிஜ் நகரில் விவசாய தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வாகனத்துக்கு அருகே சென்ற காரில் குண்டு வெடித்தது. இதில் 14 பெண்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் அதிபர் பஷர் அசாத்தின்பதவி விலகலுக்கு பின் வடகிழக்கு அலெப்போ மாகாணத்தில் உள்ள மன்பிஜ் நகரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. இங்கு துருக்கி ஆதரவு பிரிவுகளான சிரியா தேசிய ராணுவம் அமெரிக்க ஆதரவு குர்தீஷ் தலைமையிலான சிரியா ஜனநாயக படைகளுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றது.