மொராக்கோ அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 46 பாகிஸ்தானியர்கள் பலி
18 Jan,2025
மேற்கு ஆப்ரிக்க நாடான மவுரித்தேனியாவில் இருந்து 66 பாகிஸ்தானியர்கள் உள்பட 80 அகதிகளை ஏற்றி கொண்டு படகு ஒன்று ஸ்பெயின் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த படகு மொராக்கோவின் துக்லா துறைமுகம் அருகே கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 50 பேர் கடலில் மூழ்கினர். அவர்களில் 40க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பலியாகினர். உயிர் பிழைத்த அகதிகள் மீட்கப்பட்டு தக்லா அருகே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.