ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
14 Jan,2025
ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், நாட்டின் இரண்டு மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் பூமியில் இருந்து 37 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.