வட கொரிய ராணுவம் சின்னா பின்னமாகி இதுவரை 3,000 வட கொரிய ராணுவம் இறந்து விட்டதாக
25 Dec,2024
உக்ரைன் போரில் பல ராணுவத்தை இழந்த ரஷ்யாவுக்கு, கடந்த 9 மாதங்களாக வட கொரியா தனது படைகளை கொடுத்து உதவி வருகிறது. இந்த விடையம் தற்போது தான் வெளியாகி வருகிறது. சுமார் 8,000 ராணுவத்தை வட கொரிய அதிபர் ரஷ்யாவுக்கு கொடுத்துள்ளார். ஆனால் வட கொரிய ராணுவம், உக்ரைனில், கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு வருகிறார்கள். காரணம் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதை தான் இது. சரியான ஆயுத சப்பிளை இல்லை ! குளிரைத் தாங்கும் உடைகள் இல்லை. மேலும் சொல்லப் போனால் சரியான உணவைக் கூட ரஷ்ய அரசு இவர்களுக்கு கொடுக்கவில்லை.
இதனால் வட கொரிய ராணுவம், உக்ரைன் மண்ணில் என்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து தெறித்து ஓடுகிறது. இவர்களுக்கு உதவ ரஷ்ய ராணுவம் வரவில்லை. பல கள முனைகளில், உக்ரைன் படைகள் இவர்களை திரத்தி திரத்தி வேட்டையாடி வருகிறார்கள். இதனை உக்ரைன் ராணுவம் காணொளியாக வெளியிட்டுள்ள விடையம், உலகையே அதிரவைத்துள்ளது. மிகவும் கடினமான ரஷ்ய ராணுவத்திற்கே தண்ணி காட்டி வருகிறது, உக்ரைன் ராணுவம். இந்த நிலையில், எந்த ஒரு பெரிய பயிற்ச்சியோ இல்லை போர் களத்தை நேரில் சந்திக்காத, வட கொரிய ராணுவம் சின்னா பின்னமாகியுள்ளது. இதுவரை 3,000 வட கொரிய ராணுவம் இறந்து விட்டதாக, உக்ரைன் அறிவித்துள்ளது. கீழே வீடியோ இணைப்பு !