பாகிஸ்தானில் இருந்து வான்வழியே மீது ஜெட் விமானங்கள் பொழிந்த குண்டுமழை: 15 பேர் உயிரிழப்பு
25 Dec,2024
பாகிஸ்தானில் இருந்து வான்வழியே ஆப்கானிஸ்தான் மீது ஜெட் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 15 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பக்திகா மாகாணத்தில் பர்மால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் இருந்து தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர்.இதில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் 7 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதில், ஒரே குடும்பத்தின் 5 உறுப்பினர்கள் உயிரிழந்து உள்ளனர். பாகிஸ்தானில் இருந்து ஜெட் விமானங்கள் குண்டுமழை பொழிந்துள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தலீபான்களின் பாதுகாப்பு அமைச்சகம் சூளுரைத்து உள்ளது. நிலம் மற்றும் இறையாண்மையை பாதுகாப்பது என்பது தங்களுடைய சட்ட உரிமை என அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது.