மத்திய தரை கடலில் வெடிவிபத்து - மூழ்கியது ரஸ்ய சரக்கு கப்பல்
24 Dec,2024
ரஸ்யாவின் உர்சா மேயர் மேஜர் என்ற சரக்கு கப்பல் மத்தியதரை கடவில் வெடிவிபத்து காரணமாக மூழ்கியுள்ளது.
ஸ்பெயினிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையி;ல் உள்ள கடற்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கப்பலின் பணியாளர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.
ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் கட்டுமான நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நிறுவனமொன்றின் கட்டுப்பாட்டிலிருந்த கப்பலே வெடிவிபத்து காரணமாக மூழ்கியுள்ளது.
கப்பல் பணியாளர்கள் 16 பேரில் 14 பேரை மீட்டு ஸ்பெயினிற்கு கொண்டுவந்துள்ளதாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெடிவிபத்திற்கு என்ன காரணம் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கவில்லை.