காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 20 பேர் பலி
23 Dec,2024
காசா மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் கடந்த ஓராண்டும் மேலாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
காசாவில் இடம்பெயர்ந்தோர் தங்கி உள்ள பள்ளி ஒன்றின்மீது ஹமாஸ் படையினரை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் நான்கு குழந்தைகள் உள்பட ஆறு பேர் பலியாகினர். இதேபோல் டெய்ர் அல்-பலாஹ் பகுதியில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் தெற்கு கான்யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் தாக்கியதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.