சாத்தான் 2 ராட்சச அணு ஏவுகணை... களமிறக்கிய புடின்... கவனிக்கும் அமெரிக்கா
28 Nov,2024
16,000 மைல் வேகத்தில் செல்லும் சாத்தான் 2 ஏவுகணைகளை போருக்கு தயார் செய்யும்படி ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாத்தான் 2 ஏவுகணைகள் அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது ஆகும். அணுசக்தி திறன் கொண்ட RS-28 சர்மட் என்ற ஏவுகணைதான் சாத்தான் ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது. இது "உலகின் கொடிய ஆயுதம்" என்று அழைக்கப்படுகிறது. தற்போது உலகில் ஆக்டிவ்வாக இருப்பதிலேயே மோசமான போர் ஆயுதம் இந்த சாத்தான் 2 ஏவுகணைதான்
திரவ எரிபொருளில் இயங்க கூடிய ஏவுகணை ஆகும் இது. இந்த ஏவுகணை தடுக்க முடியாத 15,880mph வேகத்தில் செல்ல கூடியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பு ஆகும் இது. 14-அடுக்கு கோபுரம் போல உயரமானது இது. மொத்தமாக 208 டன் எடை கொண்டது இது. மொத்தமாக 10 அணு ஆயுதங்களை தலா 7 கிலோடன் எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது இது. அணு ஆயுத போர்: சமீபத்தில்தான் ரஷ்யா உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது ICBM ஏவுகணைகளை ஏவி தாக்கி உள்ளது.
இது அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இதை தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையான நேரத்தில் அணு குண்டை வைத்து ஏவலாம். இல்லையென்றால் அணுகுண்டு இல்லாமல் ஏவ முடியும். இதை போர்க்கப்பலில் இருந்தும் கூட ஏவ முடியும். பொதுவாக இந்த ஏவுகணையை ஒரு நாடு பெரிய போரில் மட்டுமே பயன்படுத்தும்.
அல்லது பெரிய சோதனைகளை செய்தால் பயன்படுத்தும். அணு குண்டு சோதனைகளை மேற்கொள்ள இது போன்ற கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தும். இப்படிப்பட்ட ஏவுகணையை உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தி உள்ளது. இதனால் எங்கே ரஷ்யா அடுத்து அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போக ரஷ்ய அதிபர் புடின்.. ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
பொதுவாக அணு ஆயுத ஷெல்டர்கள்.. அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பங்கர்கள் ஆகும். முக்கிய தலைவர்கள்.. பெருமளவிலான மக்களை பாதுகாக்கும் விதமாக பங்கர்கள் அமைக்கப்படும். அணு கதிர்வீச்சு பாதிக்காத வகையில் பாதுகாப்பாக பல மீட்டர் அகலமான சுவர்கள் பூமிக்கு அடியில் சுரங்கமாக அமைக்கப்பட்டு இருக்கும். இது போன்று உலகம் முழுக்கவே பங்கர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த கூடாது என்ற விதியை வைத்து உள்ளது ரஷ்யா. ஆனால் இந்த விதியை ரஷ்யா தற்போது அதிபர் புடின் உத்தரவின் பெயரில் மாற்றி உள்ளது. அதன்படி அணு சக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி உக்ரைன் உள்ளிட்ட அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்.. என்று புடின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யாவின் கொள்கை மாற்றத்திற்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்