ஸ்பெயின் மருத்துவமனையில் தீ 10 பேர் பலி
16 Nov,2024
ஸ்பெயினின் சரகோசா அருகில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை இயங்கி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை மருத்துவமனையில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதால் அடுத்தடுத்து அறைகளில் தீப்பிடித்தது.
இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றி வந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் புகையின் காரணமாக ஏற்பட்ட மூச்சுதிணறலில் சிக்கி 10 பலியானதாக கூறப்படுகின்றது.