பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு!
09 Nov,2024
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. வெடிகுண்டு செயலிழக்கும் படை மற்றும் உள்ளூர் போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
வித்து குறித்து தகவலறிந்த மீட்பு மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவ உதவிக்காக குவெட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிக்கெட் பூத் அருகே வெடிப்பு ஏற்பட்டபோது, இரண்டு ரயில்கள் புறப்பட இருந்ததாகவும், ஏராளமான பயணிகள் நடைமேடையில் இருந்ததாகவும் கூறுகின்றனர் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குண்டுவெடிப்பின் தன்மை குறித்து விசாரணை மேரோக்ள்ளப்பட்டு வருவதாகவும், சேதங்கள் குறித்தும் மதிப்பிடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது தவிர அங்கு பிரிவினைவாத கிளர்ச்சியும் அதிகரித்து வருகிறது.