இஸ்ரேல் ராணுவ தளம் மீது ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல்: 4 வீரர்கள் பலி; காசாவில் 20 பேர் பலி
16 Oct,2024
மத்திய இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தின் மீது ஹிஸ்புல்லா குழுவினர் நடத்திய டிரோன் தாக்குதலில் 4 இஸ்ரேல் வீரர்கள் பலியானார்கள். காசாவில் இஸ்ரேல் நடத்திய குண்டு மழையில் 20 பேர் பலியாகி விட்டனர். ஹிஸ்புல்லா குழுவினர் டிரோன் மூலம் நேற்று தாக்குதல் நடத்தினர். மத்திய இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 இஸ்ரேல் வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடியாக வடக்கு லெபனானில் நேற்று இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இதே போல் காசா பகுதியில் நேற்று அதிகாலை பள்ளி ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். பல பாலஸ்தீனியர்கள் நுசிராட்டில் உள்ள பள்ளியில் தஞ்சம் அடைந்தனர். அந்த பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதால் 20 பேர் பலியாகி விட்டனர். டெய்ர் அல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனை மீதும் இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டன. சுமார் 50 பேர் காயமடைந்தனர்.