சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓருரு நாளில் பெய்தது தான் இந்த வெள்ளபெருக்கிற்கு காரணம் என்று மொராக்கோ நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்ப மண்டல சூறாவளியால் இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பாலைவனம் என்றால், அது சஹாரா பாலைவனம் தான். பூமியின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனமான இது ஆப்பிரிக்கக் கலாச்சாரம்,
.அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து செங்கடல் வரை வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதிகளில் சஹாரா பாலைவனம் நீண்டு காணப்படுகிறது. எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ, மேற்கு சஹாரா, மொரிட்டானியா, மாலி, நைஜர், சாட், சூடான் உள்ளிட்ட பதினோரு நாடுகளில் சஹாரா பாலைவனம் இருக்கிறது. "அமெரிக்காவே ஆடிப்போச்சு.. இப்படிப்பட்ட புயல், மழை நம்ம ஊருக்கு வராத வரைக்கும் நல்லது.. பாருங்க " அப்படி என்றால் சஹாரா பாலைவனம் எவ்வள நீளம் என்கிறீர்களா?
3,629,360 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டது சஹாரா பாலைவனம். கிழக்கிலிருந்து மேற்காக 4,800 மைல்கள் நீளம் இருக்கிறது. இதன் அகலம் வடக்கிலிருந்து தெற்காக 1,118 மைல் அகலம் கொண்டது. இந்தஅகலமும் நீளமும் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வருகிறது. சஹாரா பாலைவனம் பூமியில் மிகவும் வெப்பமான இடங்களில் ஒன்றாகும். கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 100.4 ஊF (38 ஊC) - 114.8 ஊF (46 ஊC) வரை காணப்படும். சஹாராவின் வெப்பநிலை காரணமாக அங்கு ஓர் உயிரினம், வாழ்வது என்பது கடினமாகும். அதேநேரம் பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், இரவில் வெப்பநிலை வேகமாகக் குறைந்து காணப்படும். சில நேரம் உறைபனிக்குக் கீழே காணப்படும். சஹாராவில் அரிதாகவே மழை பொழியும். சில பகுதிகளில் மழை பெய்ய வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.
சஹாரா பாலைவனத்தை பொறுத்தவரை மொராக்கோ நாடு தான் மிக முக்கியமானதாகும். மொராக்கா நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனப்பகுதி தான் சுற்றுலாப்பயணிகளுக்கு பிடித்த இடம். இங்கு பல கொடிய விஷம் மிகுந்த ஊர்வன உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த பகுதியில் எப்போதாவது அபூர்வமாகவே மழை பெய்யும். அதாவது ஆண்டில் சில நாட்களில் தான் மழையே பெய்யும். அதனால் வறண்டு போய் மோசமான காணப்படும். பாலவனத்தில் மட்டுமே விளையும் பேரிட்சை மரங்களும் இந்த பாலைவனம் காணப்படும்.
" இந்நிலையில் சஹாரா பாலைவனத்தில் திடீர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை வெறும் இரண்டு நாட்களில் பெய்ததால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சஹாரா பாலைவனத்தில் எப்போதுமே வறண்டே காணப்படும் இரிக்கி ஏரி, நீர் நிரம்பி காணப்படுகிறது.
50 ஆண்டுகளில் முதன்முறையாக மொரோக்கோவில் (Morocco) உள்ள இந்த பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஓராண்டில் பெய்யவேண்டிய மழை 2 நாள்களில் பெய்திருக்கிறது. இதுதான் நிலைமைக்கு காரணம் என்று கூறும் வானிலை ஆய்வாளர்கள்,
காற்றின் ஈரத்தன்மை அதிகரித்திருப்பதால் வரும் மாதங்களில் கூடுதல் மழை வரும் என்கிறார்கள். இப்படி ஒரு மழை பெய்த 30 முதல் 50 ஆண்டுகாலம் ஆகிவிட்டது என்றும், மொராக்காவின் தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டதாகவும்,
வெப்ப மண்டல சூறாவளியால் இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். அப்படி எவ்வளவு தான் மழை பெய்தது என்கிறீர்களா.. நம்ம ஊர் காரைக்குடியில் பெய்த மழையை விட கம்மி தான். 24 மணி நேரத்தில் 100 மி.மீ மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. காரைக்குடியில் நேற்று ஒரே நாளில் 154 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது