திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் திருச்சி மற்றும் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வட்டமடித்து வருகிறது. விரைவில் விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட உள்ள நிலையில் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தயார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து இன்று மாலை சுமார் 141 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட விமான பணியாளர்களுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. "
சுமார் 2.40 மணிக்கு விமானம் ஓடு தளத்திலிருந்து வானில் பறந்த நிலையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானம் நடுவானில் சென்ற போது திடீரென சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை மேலும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து எரி பொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விமானம் நடுவானில் வட்டம் அடித்து வருகிறது. பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும் விமான நிலையத்தில் தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இருக்கும் நிலையில் விமான பயணிகளும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் அச்சம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகத்தினர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் உள்ளிட்டோர் விமான நிலையம் விரைந்துள்ளனர். மேலும் விமானம் தர இறங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் சிறிது நேரத்தில் பத்திரமாக விமானம் தரையறுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் குறைந்தவுடன் விமானம் தரையிறங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் விமானப் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரும் வழியானது திறக்கப்பட்டு, அந்த வழியாக ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட உள்ளன. விமானத்தில் இருக்கும் பயணிகளுக்கு அச்சம், பதட்டம் உள்ளிட்டதே காரணமாக உடல் நலக்குறைவு ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி செய்ய மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் திருச்சி மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகள் தயாராக இருக்குமாறு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக திருச்சி விமான நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரசு மருத்துவமனையும், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளும் தயாராக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவசர மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்ம் படுக்கைகள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விமானதத்தின் எரிபொருள் குறைந்த பிறகு அதனை தரையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். விமானத்தில் எரிபொருள் குறைந்த நிலையில் இரவு 8.15 மணிக்கு விமானம் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. முன்னதாக திருச்சி விமான நிலையமே பரபரப்புக்குள்ளாகியது. விமான நிலையத்தை நோக்கி 20க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் வந்தன. தீயணைப்பு வாகனங்கள் வந்தன. லேண்டிங் கியர் பிரச்சினை.. அந்தரத்தில் ஏர் இந்தியா பயணிகள்! புதுக்கோட்டையை வட்டமிட்ட ஏஎக்ஸ்பி 613 விமான நிலைய அதிகாரிகள், சுகாதாரத்துறையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் அதிகமாக குவிந்ததால் விமான நிலையம் போர்க்களமாகியது. அங்கிருந்த பயணிகள் அனைவரும் பரபரப்பான மனநிலையில் காணப்பட்டனர். ஆனால் விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் நிம்மதியடைந்தனர்.