நிர்கதியாய் நிற்கும் ஹிஸ்புல்லா: புதிய தலைவரின் மரணத்தையும் அறிவித்தது இஸ்ரேல்
08 Oct,2024
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த நஸ்ரல்லா கொல்லப்பட்டதன் பின்னர் புதிய தலைவராக பதவியேற்க இருந்த ஹசீம் சபிதீனும் (Hashem Safieddine) இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் (Yoav Gallant) உறுதிபடுத்தியுள்ளார்.
பலஸ்தீனத்தில் (Palestine) ஹமாஸ் அமைப்பை மொத்தமாக அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் (Israel) தீவிரமாக செயற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பிற்கு சார்பாக ஈரான் (Iran) ஆதரவு பெற்ற லெபனானின் (ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்டது.
அதனை தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவித்தும் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஹிஸ்புல்லா முன்னாள் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பிறகு அந்த அமைப்பை வழிநடத்த சரியான தலைமை இல்லை என்றும், அந்த அமைப்பு உடைந்து போயுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலின் அறிவிப்பு
எனினும், கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா தனக்கு பின் ஹிஸ்புல்லாவின் உயர் அதிகாரியான ஹஷேம் சஃபிதீன் அந்த அமைப்பின் தலைவராக செயல்படுவார் என்று நஸ்ரல்லா உயிருடன் இருந்த போதே தெரிவித்து இருந்தார்.
ஆனால், தற்போது லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த நான்காம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் புதிதாக தலைவராக பதவியேற்க இருந்த ஹசீம் சபிதீனும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.