60 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு..!!நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் மிரட்டல்..!!
02 Oct,2024
காஸா பகுதியில் இரவு நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். என்கிளேவின் தெற்கில் உள்ள கான்யூனிஸ் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவப் படை முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் மிரட்டல்..!!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என பட்டியலிட்டு பெயர்களை ஈரான் உளவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய தலைவர்களை தீர்த்துக் கட்டுவோம் எனவும் ஈரான் உளவுத்துறை மிரட்டல் விடுத்தது.
ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் வீரர் உயிரிழப்பு..!!
லெபனானுக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய படைகள் மீது ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் வீரர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. லெபனானுக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய படைகள் மீது தாக்குதல் நடத்தி வெளியே விரட்டிவிட்டதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.