இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல்.. ஈரான் தாக்குதலுக்கு நடுவே கடும் துப்பாக்கி சண்டை
01 Oct,2024
இஸ்ரேலின் ஜாப்பா ரயில் நிலையத்துக்குள் நுழைந்த 2 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 4 பேர் பலியான நிலையில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இஸ்ரேல் போலீசார் 2 தீவிரவாதிகளையும் சுட்டு கொன்றனர். ஒருபுறம் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்த நாட்டுக்குள் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. காசா மீதான போர் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்ல அமைப்பினருக்கு பழி தீர்க்கும் வகையில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கி உள்ளது.
100க்கும் அதிகமான ஏவுகணை இஸ்ரேல் மீது ஈரான் ஏவி வருகிறது. ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் தனது ‛அயன் டோம்' மூலம் வானில் இடைமறித்து அழித்து வருகிறது. ஆனாலும் ஈரான் அசரவில்லை. தொடர்ந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வருகிறது. இதையடுத்து அமெரிக்கா ராணுவம் இஸ்ரேலுக்கு உதவி செய்ய வேண்டும். இஸ்ரேல் நோக்கி ஈரான் அனுப்பும் ஏவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்த வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் ஏவுகணையை சுட்டு வீழ்த்துங்கள்.. ஜோ பைடன் போட்ட உத்தரவு.. இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்க படை இப்படி ஈரான் தாக்குதலுக்கு நடுவே தான் இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதாவது இஸ்ரேலின் ஜாப்பா ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய 2 தீவிரவாதிகள் சரமாரியாக அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேர் பலியான நிலையில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக இஸ்ரேல் போலீசார் ரயில் நிலையம் சென்றனர். போலீசாரை நோக்கியும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. ஜெருசலேம் தெருவில் நடந்த துப்பாக்கி சண்டையில் இறுதியாக 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் 2 பேரும் எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் இருவரும் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று இஸ்ரேல் கருதுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..
அமெரிக்கா வார்னிங்கை மீறி ‛அட்டாக்'.. மூளும் 3வது உலகப்போர்? மேலும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த 7 பேரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி இஸ்ரேல் தரப்பில், ‛‛காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் என்பது இஸ்ரேல் நேரப்படி இரவு 7.01 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 9.31) மணிக்கு நடத்தப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் ரயிலில் இருந்து 2 தீவிரவாதிகள் இறங்குவதும், அதில் ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் வெளியாகி பரவி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலால் அந்த நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது