தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 25பேர் உயிரிழப்பு..!!
01 Oct,2024
தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பள்ளிப் சுற்றுலாவுக்காக 44 பேரை ஏற்றிக்கொண்டு அயுத்தாயாவுக்குச் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது, இந்த சுற்றுலாவுக்கு மாணவர்களுடன் 6 ஆசிரியர்களும் சென்றுள்ளனர். அந்த பஸ், கு கோட் நகரில் ஜீர் ரங்சித் என்ற பகுதியருகே பஹோன் யோதின் சாலையில் சென்றபோது நண்பகல் வேளையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில் 16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் உட்பட 25பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷினவத்ரா இரங்கல் தெரிவித்தார்.