அமெரிக்காவில் புயல் தாக்கி 52 பேர் பலி
29 Sep,2024
அமெரிக்காவில் ஹெலன் புயல் தாக்கி 52 பேர் பலியானார்கள். 30 லட்சம் பேர் மின்சாரம் ல்லாமல் தவித்தனர்.அமெரிக்காவில் நேற்று ஹெலன் என்ற புயல் தாக்கியது. தென்கிழக்கு அமெரிக்கா பகுதி இந்த புயலால் பெரும் சேதம் அடைந்தது. இதில் 52 பேர் பலியானார்கள். 30 லட்சம் ேபா் மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்தனர். ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கினர். ஜார்ஜியா, கரோலினாஸ் மற்றும் டென்னசி வழியாக புயல் கரையை கடந்த போது மரங்கள், வீடுகள் நாசம் அடைந்தன. பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.