பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றியது ஐநா
19 Sep,2024
ஆக்கிரமிக்கப்பட்டபாலஸ்தீன பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேறவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது.
ஒருவருடத்திற்குள் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறவேண்டும் என கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உறுப்பு நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
124 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன,14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன,43 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளன.
பிரிட்டனும் அவுஸ்திரேலியாவும் வாக்கெடுப்பை தவிர்த்துள்ள அதேவேளை அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்டபகுதிகளில் தனது சட்டவிரோத பிரசன்னத்தை விரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் குடியேற்றங்களை நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சில மாதங்களின் பின்னர் ஐநா இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.