லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு
19 Sep,2024
லெபனான்: லெபனானில் பேஜர்கலை தொடர்ந்து வாக்கி டாக்கி வெடித்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பேஜர்கள் வெடித்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. இன்று ஆலோசனை நடத்த உள்ள நிலையில் வாக்கி டாக்கிகள் வெடித்தது.
லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஜ்புல்லா அமைப்பினர் செல்போன்களுக்கு பதிலாக பேஜர் கருவிகளை தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தங்களுடைய இருப்பிடம் பற்றிய விவரங்கள் வெளியே தெரிய வராது என்பதற்காக இவற்றை பயன்படுத்துகின்றனர். இவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சூழலில், நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் உபகரணங்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். 2,800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் இருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. இன்று ஆலோசனை நடத்த உள்ள நிலையில் வாக்கி டாக்கிகள்
லெபனானில் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் பலர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 450 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது இதனை தொடர்ந்து, லெபனானின் செஞ்சிலுவை சங்கத்தின் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பலர் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தெற்கு லெபனான், பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர் பகுதிகள் மற்றும் மத்திய பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் லெபனானின் செஞ்சிலுவை சங்கத்தின் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டனர்.