நேபாளத்தில் கனமழை: மண்சரிவு ஏற்பட்டு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு-...!!
12 Jul,2024
நேபாளத்தில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், காத்மாண்டு நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முகிலிங்-நாராயண்காட் நெடுஞ்சாலையில் சிட்வான் மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் சென்று கொண்டிருந்தன.