தென்கொரிய தலைநகரில் பொதுமக்கள் மீது மோதிய கார் – 9 பேர் பலி
02 Jul,2024
தென்கொரிய தலைநகர் சியோலில் பாதசாரிகள் மீது கார் ஒன்றுமோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு கார்கள் மீது மோதிய பின்னர் குறிப்பிட்ட கார் பொதுமக்கள் மீது மோதியுள்ளது.
60 வயது நபர் ஒருவரே குறிப்பிட்ட காரை செலுத்தியுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.