குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு
12 Jun,2024
குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் 40 பேர் உயிரிழந்ததை அடுத்து வெளியுறவு இணை அமைச்சர் அந்நாட்டுக்கு விரைகிறார். பிரதமர் மோடி உத்தரவின் பேரில் ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் குவைத் விரைகிறார். கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கிய பலர் மூச்சுத்திணறி 53க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்திலிருந்து தப்பிய தொழிலாளர் தகவல்
புகை சூழ்ந்திருந்ததை கண்டவுடன் உடனடியாக முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வெளியேறினோம்” என குவைத்தில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்து உயிர் தப்பிய தொழிலாளர் தகவல் தெரிவித்துள்ளார். குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 53 பேர் உடல் கருகியும் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர்.