காசாவில் உச்சக்கட்ட பதற்றம்....! முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: பலர் உயிரிழப்பு
28 May,2024
இஸ்ரேல் (israil) தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது காசாவில் (gaza) இருந்து ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் பாரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதலில் நடத்தி உள்ளது.
வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரபாவில் தஞ்சம் புகுந்துள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.
இந்த மிலேச்சதனமான தாக்குதலில் 35 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர் என காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மற்றும் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.
இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் காசாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
எற்கனவே ரபா எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.
தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். இதற்கிடையில் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய புதிய தாக்குலுக்கு 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.