மழை, வெள்ளம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு...இந்தோனிசியா
14 May,2024
கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு...
சுமத்ரா மாகாணத்தில் நான்கு மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும் இழந்துள்ளனர்.
திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 40க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதால், சுமத்ரா தீவு மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தோனேசியாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், முக்கியத் தீவுப்பகுதியான சுமத்ராவில் வெள்ளத்தோடு, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், எரிமலையும் வெடித்திருப்பதால், சாம்பலும் வெள்ளத்தில் கலந்து, பெரும்பாலான இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.
குறிப்பாக, சுமத்ரா மாகாணத்தில் நான்கு மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும் இழந்துள்ளனர்.
வெள்ளத்தின்போது பலர் அடித்துச் செல்லப்பட்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 41ஆக இருப்பதாகவும், மேலும் பலர் காணவில்லை என்றும், அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 2 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.