ரஃபா எல்லையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் படையினர் 20 பேர் பலி
08 May,2024
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 7 மாதங்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் இதுவரை 34,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டனர். ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார். போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார் நாடுகள் சமரச முயற்சிகளை எடுத்து வருகின்றன. எகிப்தின் நிபந்தனைகள் அடங்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் படையினர் ஏற்று கொண்டனர். ஆனால் இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஃபா எல்லையை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் அங்கு தாக்குதல்களை நடத்துவதற்கு முன் மக்களை வௌியேறுமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து ரஃபாவின் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் படையினர் 20 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அங்கிருந்த சுரங்கப் பாதைகளும் அழிக்கப்பட்டன.