அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலை: தங்கத்துகள்கள் வெளியேற்றம்!!
03 May,2024
எரிமலைகள் என்றாலே லாவா குழம்புகள் தான் வெளியேறும். ஆனால் எரிமலையில் இருந்து தங்க துகள்கள் வெளியேறுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. முழுக்க பனி பாறைகளால் சூழப்பட்டுள்ள கண்டம் என்றாலும், அண்டார்டிகாவிலும் நெருப்பை கக்கும் 138 எரிமலைகள் இருக்கின்றன. இவற்றுள் 8 எரிமலைகள் அவ்வப்போது லாவா குழம்பை வெளியேற்றி உயிர்ப்புடன் இருப்பவை. அதில் ஒன்றுதான் ரோஸ் தீவில் உள்ள மவுண்ட் எரிமலை. 1972ம் ஆண்டு முதல் நெருப்பு குழம்பை வெளியேற்றி வரும் இந்த எரிமலை பகுதியில் ஆய்வகம் ஒன்றையே அமைத்து ஆய்வு செய்து வருகிறது அமெரிக்கா.
இந்த எரிமலை செயற்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகளை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்து சென்றுள்ளது அவர்கள் கண்டறிந்த ஒரு அரிய தகவல். வாயு மற்றும் தூசு துகள்களுடன் தங்க துகள்களையும் எரிமலை வெளியேற்றி வருவதே அதற்கு காரணம். ஒன்றல்ல இரண்டல்ல ஒவ்வொரு நாளும் 5 லட்சம் மதிப்பிலான தங்க துகள்களை இந்த எரிமலை வெளியேற்றி வருகிறது என்றால் நம்பமுடிகிறதா. எரிமலை கக்கும் போதெல்லாம் 20 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவிலான தங்க துகள்களும் வெளியேறி வருகின்றன.
இதனால் எரிமலையை சுற்றி 1000 கிலோ மீட்டர் வரை தங்க மழை போல தங்க துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன. எரிமலை பாறைகளில் தங்க படிமங்கள் இருக்கலாம் என்றும் எரிமலை சீற்றத்தின் போது லாவா குழம்புடன் துகள்களாக தங்கம் வெளியேறி வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் செயற்கை கோள்களை ஆய்வு செய்த போது எரிமலையின் உச்சியில் லாவா குழம்பால் மிகப்பெரிய ஏறி உருவாகி இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.