ரஃபா நகரம் மீது இஸ்ரேல் குண்டு மழை: 9 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி
22 Apr,2024
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய நிலையில் 7 மாதங்களாக நீடிக்கிறது. இந்த போரில் இதுவரை 34,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு விட்டனர். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலின் உத்தரவால் வடக்கு காசாவில் இருந்து ஏராளமான பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
தொடர்ந்து வடக்கு, மத்திய காசா பகுதிகளில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் தற்போது மீண்டும் தெற்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தெற்கு காசாவில் டெல் சுல்தான் நகரின் மேற்கு பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் குடியிருப்புகளின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த பயங்கர தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்து விட்டனர்.