பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 80 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்
19 Apr,2024
பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 80 பேர் பலியானதாக பேரிடர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கைபர் பக்துங்குவா மாகாணத்தில் கனமழை, கட்டிட இடிபாடு, மின்னல் தாக்கி போன்ற இயற்கை இடர்பாடுகளால் 46 பேர் இறந்தனர். கிழக்கு பஞ்சாபில் 21 பேர், பலூசிஸ்தானில் 10 பேர் உள்பட 80 பேர் இறந்தனர்.
பருவநிலை மாற்றம் காரணமாகவே பாகிஸ்தானில் கனமழை வெளுத்து வாங்குவதாகவும் பலுசிஸ்தானில் இயல்பை விட 256 சதவீதம் கனமழை பதிவாகி உள்ளதாகவும், பாகிஸ்தான் முழுவதும் 61 சதவீதம் இயல்பை மீறி மழை பெய்து உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை பாதிப்பு அதிகம் உள்ள மாகாணங்களில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மழையில் சிக்கி தவித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.