வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 பேர் உயிரிழப்பு.. தண்ணீரில் தத்தளிக்கும் தான்சானியா!
16 Apr,2024
தான்சானியாவில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடற்கரை ஓரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 2 வாரங்களாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர்.
தான்சானியாவில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடற்கரை ஓரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி சுமார் 60 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதில், வெள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 மாணவர்களும் உயிரிழந்தனர். அந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கனமழையால் 1,26,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தான்சானியா அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் தான்சானியா மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 63 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.