நியுசிலாந்திற்கு பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு, 50இற்கு மேற்பட்டோர்
11 Mar,2024
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நியுசிலாந்தின் ஒக்லாண்ட்டிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 50இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ளெியிட்டுள்ளன.
இதேவேளை காயமடைந்தவர்களில் 13 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லட்டம் எயர்லைன்ஸிற்கு சொந்தமான LA800 விமானத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதனால் விமானம் தடுமாறத்தொடங்கியது என லட்டம் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை விமானம் ஒக்லாண்டில் தரையிறங்கியதும் தயார் நிலையில் நின்ற நோயாளர் காவு வண்டியில் பயணிகள் அவசர அவசரமாக ஏற்றப்பட்டனர்.
அத்துடன் நோயாளர் காவுவண்டியில் பணியாற்றுபவர்கள் பயணிகளை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
பயணிகள் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார் என நோயாளர் காவுவண்டி சேவை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் 13 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.