ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு.. இதுவரை 25 பேர் உயிரிழப்பு!!
20 Feb,2024
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. கிழக்கு ஆப்கான் பகுதியில் உள்ள நூர்காரத் பகுதியில் மொகானி கிராமத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் எதிரொலியாக நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று நிலவரப்படி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காணாமல் போனவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணம், பெரும்பாலும் மலை மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.